Thursday, December 2, 2010

U.A.E.NATIONAL DAY



இன்று யு ஏ யி நேஷனல் டே, துபாய்,அபுதாபி,ஷார்ஜா,அல் அயின்,ராசல் கைமா ஃபுஜெரா எல்லா இடங்களிலும் பயங்கர அலங்கராமாக இருக்கும்,

அரபி பசங்க காரில் ஹோலி போல் வண்ணங்கள் தூவி ஆடுர ஆட்டம் இருக்கே, எப்பா/
டம்.


எல்லா பில்டிங்குக்கும், மரஙகளுக்கும் கலர் கலரா லைட் மாலைகள் மாலையா மாலையாக தொங்க விட்டு இருக்கு, போனவருடம் ரொம்ப டவுன், தீடீர் சரிவு , போன வருடத்த விட இந்த வருடம் பரவாயில்லை கொண்டாட்டம் அதிகாமாக இருக்கு. அதிக ஜோடிப்பா இருக்கு.
பார்கக்வும் அழகாக இருக்கு.

கார்னிஷ் , டேரா அப்ரா சைடில் தண்ணீரில் போட் வைத்து ஃப்வர் வொர்க்ஸ், மிக பிரமாண்டமாக டிசைன் டிசைனா வெடிப்பார்கள் இந்த வான வேடிக்கையை பார்க்க ஒட்டு மொத்த திரல்களையும் அங்கு காணலாம்.இதை பார்க்க குழந்தைகலுக்கு ரொம்ப கொண்டாட்டம்.
39 ஆம் வருட கொண்டாட்டாம்
இங்கு அடிக்கடி நடப்பது அவார்டு விஷாதான்.
தும்மினா இருமினா கூட அவார்டு கொடுத்துடுவாங்க போல
நிறைய அவார்டுகள் பரிசுகள்
அரபி பெண்களும் யு ஏ ஈ கொடி வண்ணத்தில் தலைக்கு ஸ்கார்ஃப்,குடை, வாட்ச்,வளையல், ரிங்க் ஆகியவைபோட்டு கொள்ளவார்கள்


பள்ளிகளில் சிறுமிகள் அனைவரும் ஒரே வண்ணத்தில் ஹேர் கிளிப்,தலைக்கு கேப்,கழுத்துக்கு மணி , எல்லோரும் கொடியும் குத்தி கொண்டு பரைட் பன்ணி அனைவரும் பார்க் சென்று பிள்ளைகளுக்கு ஆப்பிள்,பிட்சா, சாக்லேட் எல்லாம் கொடுத்து மறுபடி பள்ளிக்கு கூப்பிட்டு வருவார்கள்.
பள்ளிசிறுமிகளின் கொண்டாட்டாம்.
இங்கு வாரத்தில் வெள்ளி சனி
விடுமுறை. இது போல் ஈத், நேஷனல் டே என்றால் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஒரு நாள் லீவு சேர்ந்து வரும் வெள்ளி சனி கணக்கு கிடையாது அத கழிச்சிட்டு கூடுதல் விடுமுறைவேறு, பிரைவேட் கம்பேனிகளுக்கு வெள்ளி சனி லீவில் இது போல் பெஸ்டிவல் லிவு வந்தால் அந்த லீவிலேயே முடிந்து விடும்.
பொதுவா காருக்கு பயங்க ர அலகாரம்மாக இருக்கும், அரபிகள் காரில் மேல் புறம் நின்று கொண்டும் கதவு வழியாக எட்டி பார்த்து கொண்டும் காரை ஓட்டி செல்வார்கள் , இந்த வருடம் அபுதாபியில் எந்த கார் நல்ல அலங்காரமாக இருக்கோ அதில் 10 காருக்கு பரிசி கொடுக்க போகிறார்களாம்

வானவேடிக்கை. அருமையாக இருக்கும்
அமீரக ஷேக்குகள்
ஷேக் வருகை
அடுத்த வாரம் வருகிற முஹர்ம் நியு இயர் லீவையும் இதில் சேர்த்து வைத்து கொண்டார்கள், இந்த ஷேக்குகளை கேட்க யாரும் இல்லை. அவஙக் வசதிக்கு அவர்கள் வைப்பது தானே சட்டம்/ இப்படி லீவ மாற்றி வைத்து கொள்கிறார்கள்.

No comments: